அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.!

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று பிற்பகல், சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி (ம)பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் துணை பதிவுத்துறை தலைவர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் , எதிர்வரும் பத்து நாட்களில் பதிவுக்கு ஆவணங்கள் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தினமும் கொடுக்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்கள்.

மேலும் எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 25-03-2023 அன்று மாநிலத்தின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என்றும் உத்திரவிட்டார்கள். இக்கூட்டத்தில் அரசு செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை திருமதி பா. ஜோதி நிர்மலாசாமி இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் ம.ப. சிவன் அருள் , இ.ஆ.ப., மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: