சென்னையில் தொடர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வருகிறது. இன்று காலை 650 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்துள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன் கோயம்பேடு மார்க்கெட்டில் வெண்டைக்காய் 70க்கும் பீன்ஸ் 55க்கும் கத்திரிக்காய் 40க்கும் பீர்க்கங்காய் 40க்கும் பாவற்காய் 40க்கும் புடலங்காய் 25க்கும் கேரட் 40க்கும் முருங்கைக் காய் 80க்கும் சவ்சவ் 25க்கும் உருளைக்கிழங்கு 25க்கும் மாங்காய் 40க்கும் பீட்ரூட் 40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் 25க்கும் பீன்ஸ் 35க்கும் கத்தரிக்காய் 20க்கும் பீர்க்கங்காய் 20க்கும் பாவற்காய் 25க்கும் புடலங்காய் 15க்கும் கேரட் 30க்கும் முருங்கை காய் 60க்கும் சவ்சவ் 15க்கும் உருளைக்கிழங்கு 18க்கும் மாங்காய் 30க்கும் பீட்ரூட் 20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘’கோடை காலங்கள் என்பதால் காய்கறிகள் விலை உயர்ந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து காய்கறிகள் விலை குறைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: