பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை: முதலமைச்சர் விமர்சனம்

சென்னை: பட்ஜெட்டின் உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று முதலமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். மின்மினிப் பூச்சி போன்றது நிதிநிலை அறிக்கை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இருண்ட காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய | பழனிசாமியால் உதயசூரியன் ஒளியை பார்க்க முடியாமல் தவிர்ப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது. நிதிநிலை சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல திட்டங்களை தீட்டியிருக்க முடியும்.

அதிமுக ஆட்சியில் இருந்த இருண்ட கால நிதிநிலையை சீர்செய்தும் முன்னேற்றியும் முற்போக்கான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.

Related Stories: