வாழ்த்துவோம் முதல்வரை, போகப் போக இதை இந்தியா பின்பற்றும்: தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு..!

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர்; சொன்னதைச் செய்தார் முதல்வர், உரிமைத்தொகை அறிவித்துவிட்டார். சுயமரியாதையின் மறுபெயர் பணம், சுதந்திரத்தின் மறுபெயர் பணம். ஒரே அறிவிப்பில் பெண்களின் சுதந்திரம் சுயமரியாதை இரண்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். வாழ்த்துவோம் முதல்வரை, போகப் போக இதை இந்தியா பின்பற்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: