சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று  இணைவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், ஆலங்கட்டி மழையும் சில இடங்களில் பெய்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: