ஈக்குவடார், பெருவில் பூகம்பம்: 14 பேர் பலி

குய்டோ:  தென்அமெரிக்க நாடுகளான ஈக்குவடார், பெருவில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பங்களில் சிறுமி உள்பட மொத்தம் 14 பேர் பலியாகினர்.  ஈக்குவடார் நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தின் பாலோ நகரிலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  பூமிக்கு அடியில் 66.4 கிலோ மீட்டர் ஆழத்தில் உண்டான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவாகியுள்ளது.  சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகம், வணிக நிறுவனங்கள், பள்ளி கூடங்கள் ஆகியன பலத்த சேதமடைந்தன.  இதில் 13 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  பெருவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில், 4 வயது சிறுமி உயிரிழந்து விட்டதாக பெரு பிரதமர் லூயிஸ் ஆல்பர்டோ ஒடரோலா தெரிவித்துள்ளார்.

Related Stories: