ரஷ்யா கைப்பற்றிய மரியுபோல் நகருக்கு புடின் திடீர் பயணம்

கீவ்: மரியுபோல் நகருக்கு அதிபர் புடின் நேற்று திடீர்  பயணம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் நகர் ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டது. மரியுபோல்  இரும்பு ஆலையில் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்தனர்.   இரும்பு ஆலையில் மறைந்து இருந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவுக்கு  எதிராக கடும் பதிலடி கொடுத்தனர். 3 மாத சண்டைக்கு பிறகு  அந்த நகரை ரஷ்யா கைப்பற்றியது. அதன் பிறகு மரியுபோல்   ரஷ்யாவுடன்  இணைக்கப்பட்டது.  இந்நிலையில் ரஷ்யா வசம் உள்ள மரியுபோலுக்கு நேற்று புடின் பயணம் செய்தார். நேற்று முன்தினம்  இதேபோன்று இணைக்கப்பட்ட  கிரீமியாவுக்கு அவர் சென்றார்.

Related Stories: