வேளச்சேரி: புதுப்பேட்டை டிரைவர் தெருவை சேர்ந்தவர் மேலை நாசர். இவரது மனைவி ஷகிலா. இவர்களது மகன் மொய்தீன் அமீர் (23), சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், பெரும்பாக்கம் 1வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாரதி என்பவரை காதலித்து வந்துள்ளார். பாரதி வசித்துவந்த வீட்டுக்கு மொய்தீன் அமீர் அடிக்கடி சென்று வந்ததுடன், பலதடவை அந்த வீட்டில் தங்கியதாக கூறப்படுகிறது. இதனால், அவரிடமும் வீட்டின் ஒரு சாவி இருந்துள்ளது. பாரதி வேலை விஷயமாக கடந்த 15ம் தேதி டெல்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், மொய்தீன் அமீர் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய அவர், தனது காதலி வீட்டுக்கு சென்று தங்கியதாக தெரிகிறது.
