மதுரை ரயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தை கடத்தல்: 2 மணி நேரத்தில் மீட்பு; இருவர் கைது

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கரட்டூரை சேர்ந்தவர் ஹரிஷ்குமார். மனைவி சையது அலி பாத்திமா(25). இவர்கள் 3 மாத கைக்குழந்தை ஷாலினியுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தனர். குழந்தையுடன் பிளாட்பாரத்தில் தூங்கினர். நேற்று அதிகாலை சையது அலி பாத்திமா எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணவில்லை. புகாரின்படி திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தையை மர்ம நபர் ஆட்டோவில் கடத்திச் செல்வது தெரியவந்தது. விசாரணையில்,  மதுரை மாவட்டம், மேலூர் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த போஸ்(35)என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. அவரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர். உடந்தையாக இருந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கலைவாணி(33)யும் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசாரை, கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.

Related Stories: