கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜகோபுரம்: சொந்த செலவில் கட்டிக் கொடுத்த ஆன்மிக குடும்பம்

சென்னையில் உருவாகியுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் திருக்கோயிலை, ரூ.10 கோடியில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதற்கு ரூ.9 கோடியில் கட்டுமானம், கருவறை உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த நிதி முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது. ராஜகோபுரம் கட்டுவதற்கு ரூ.1 கோடி தேவைப்பட்டது. திருப்பதி வெங்கடாசலபதியின் அதி தீவிர பக்தரான ஏ.ஜே.சேகர் அதை தனது சொந்த செலவில் செய்து கொடுக்க முடிவு செய்தார். திருப்பதி தேவஸ்தான பணிகளை மேற்கொள்ளும் சிற்ப கலைஞர்களை கொண்டு வந்து பல மாதங்களாக ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. அதில் உள்ள ஒவ்வொரு சிலையும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தில் 5 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. செம்பினால் தயாரிக்கப்பட்ட அந்த கலசங்கள் மேல் பகுதியில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தின் வழியே சென்று தான் பக்தர்கள் பத்மாவதி தயாரை தரிசிக்க முடியும்.  இந்த கோயிலுக்கு தன்னுடைய பங்களிப்பு எக்காலமும் பேசக்கூடிய, நினைவில் இருக்கக்கூடிய வகையில் இதனை செய்து கொடுக்க ஏ.ஜே.சேகர் ரெட்டி முன் வந்தார்.

அவரின் எண்ணம் போல ராஜகோபுரம் எழில்மிகு கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த ராஜகோபுரத்தில்தான் இன்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. ஒரு கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு திருப்பதி பெருமாளின் அருள் வேண்டும். அந்த வாய்ப்பு சாதாரண பக்தன் எனக்கு கிடைத்திருப்பது கடவுள் கொடுத்த வரம் என்று ஏ.ஜே.சேகர் ரெட்டி கூறினார்.

Related Stories: