அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 ஆயிரம் பேர் நாடு கடத்தல்

கவுகாத்தி: அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 ஆயிரம் பேர் நாடு கடத்தப்பட்டதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்தார். அசாம் சட்டப் பேரவையில் அம்மாநில அமைச்சர் அதுல் போரா, கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘அசாமில் மொத்தம் 1,53,129 வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. அவர்களில் 30,000க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டனர். அவர்களின் சொந்த நாடு குறித்த தகவல்கள் இல்லை. இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் ஃபென்சிங்கின் கட்டுமானப் பணிகள் 98.5 சதவீதம் முடிந்தது’ என்றார்.

Related Stories: