தெலங்கானா மாநிலத்தில் பல இடங்களில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஹைராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் இன்று காலை திடீரென மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் மதியம் சுமார் 12 மணியளவில் இருந்து பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

இதன் காரணமாக சாலையில் வாகனத்தில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தாங்கள் வெளிநாடுகளில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகளவில் ஆலங்கட்டி மழை பெய்ததால் காரணமாக சாலையோரத்தில் எங்கு பார்த்தாலும் ஐஸ்கட்டிகளாக காணப்பட்டது.

இதையடுத்து அதிலாபாத், நிஜாமாபாத், வாரங்கல் மற்றும் ஹைதராபாத் வரை அனைத்து இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் குளிர்ச்சி நிலவியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: