இங்கிலாந்து நாட்டின் சார்பில் செயற்கைகோள்கள் மார்ச் 26ல் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து செயற்கைகோள்கள் மார்ச் 26ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டின் சார்பில் செயற்கைகோள்களை விண்ணில் ஏவும்பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் சார்பில் முதற்கட்டமாக 36 செயற்கைகோள்களை ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதன் அடுத்த கட்டமாக மேலும் 36 செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தயாரிப்பு மையத்தில் இருந்து பிப்ரவரி 16ம் தேதி இந்தியா வந்தது. தற்போது வரும் 26ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Related Stories: