துப்பாக்கி தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கம விழா

திருவெறும்பூர், மே 13: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள  உயர்நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன் 1981 மற்றும் 1982 ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களின் சங்கமம் துப்பாக்கி தொழிற்சாலை மக்கள் மன்றத்தில் நடந்தது. 36 ஆண்டுகளக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இன்று வயதானவர்களாக இருப்பதோடு அவர்கள் பல்வேறு அரசுதுறை, சுயதொழில் மற்றும் வெளிநாடுகளில் வேலைபார்த்தவர்கள் ஒன்று கூடி தங்களது பள்ளி நாட்களில் நடந்த மறக்கமுடியாத அனுபவங்களையும், நிகழ்வுகளை அனைவர் மத்தியிலும் நினைவு கூர்ந்தனர்.

மேலும் அப்போது அவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களான இளங்கோவன், முருகேசன், கோவிந்தராஜ், டேவிட், பத்மலதா, ராஜாம்பாள், தேவராஜ் ஆகிய ஆசிரியர்களும், தங்களிடம் 36 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவிகள் தங்களை மறக்காமல் அழைத்து அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் சந்திக்க செய்தது தங்களது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகும் என்றனர். இந்த சங்கமம் விழாவின் ஒருங்கிணைப்பாளராக இளங்கோவன் செயல்பட்டார்.

Related Stories: