முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. அரசின் முன்னெடுப்பு திட்டங்களுடைய செயல்பாடுகள் குறித்து கடந்த 9 மற்றும் 13ம் தேதிகளில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதும், புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் போதும் அந்த திட்டங்கள் எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வரும் 20ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் செயலாளர் உதயசந்திரன், தலைமை செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி என துறை சார்ந்த செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: