பீகார் சட்டமன்றத்தில் ‘மைக்’கை உடைத்தெறிந்த பாஜ எம்எல்ஏ சஸ்பென்ட்

பாட்னா: பீகார் சட்டமன்றத்தில் பாஜ எம்எல்ஏ லகேந்திர ரோஷன் எழுப்பிய துணைக் கேள்விக்கு வேளாண் துறை அமைச்சர் குமார் சர்வஜித் பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது, நிதிஷ் குமார் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும்  மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மூத்த எம்எல்ஏ சத்ய தேவ் ராம் குறுக்கிட்டு தலித் எம்எல்ஏ.வை தரக் குறைவாக பேசியது தொடர்பாக பாஜ எம்எல்ஏ. ரோஷனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாஜ எம்எல்ஏ. ரோஷன் ‘மைக்’கை பிடுங்கி உடைத்தெறிந்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மைக்கில் குறைபாடு இருந்தது. அதனால் அது தானாகவே கழன்று கீழே விழுந்துவிட்டது,’’ என்று தெரிவித்தார். இதையடுத்து, அவரை 2 நாட்கள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அவாத் பிகாரி சவுதாரி உத்தரவிட்டார்.

Related Stories: