பள்ளிப்பட்டு அருகே ரூ.5.84 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதி: எஸ். சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியக் ஜங்காலப்பள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில் கிராம மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.84 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆழ்துளை கிணறு அமைத்து பைப்லைன் மூலம் தெரு குழாய்களில் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  இதில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் சேவையை தொடங்கிவைத்தார்.

பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா, ஒன்றிய குழு துணைத் தலைவர் பொன்.சு.பாரதி, ஊராட்சிமன்றத் தலைவர் ராகினி முருகேசன், பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் டி.ஆர்.கே.பாபு, ஒன்றிய நிர்வாகிகள் கோபி, கோவிந்தசாமி, அன்பழகன், நதியா நாகராஜன் தேவராஜ், குருநாதன், நிர்வாகிகள் அச்சுதன், கவாஸ்கர், ஹரீஷ், கோட்டி, மது, காமேஷ், நரேஷ், தயாகர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: