பலாத்காரத்தை எதிர்த்து போராடிய சிறுமியை 34 முறை குத்திக் கொன்ற குற்றவாளிக்கு தூக்கு: குஜராத் நீதிமன்றம் அதிரடி

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் ஜெட்பூரை சேர்ந்த ஜெயேஷ் சர்வையா என்பவர்,  கடந்தாண்டு மார்ச் மாதம் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை தனது  வீட்டிற்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றார். அங்கு அந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்து தப்பிக்க முயன்றதால், அந்த சிறுமியை ஜெயேஷ் சர்வையா 34  முறை கத்தியால் குத்தி  கொலை செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த ராஜ்கோட் சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஜெயேஷ் சர்வையாவுக்கு மரண தண்டனையும், ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜனக் படேல் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள விதிகளின்படி இவ்வழக்கை நிர்பயா (டெல்லி மாணவி கொலை சம்பவம்) வழக்குடன் ஒப்பிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: