ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும் வரை திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பும்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும்வரை திமுக தொடர்ந்து கேள்வி எழுப்பும் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார். தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு  நேற்று   கூறியதாவது:   ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு ஆளுநரின் செயலை கண்டு கொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டவே நாடாளுமன்றத்தில்  கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  ஆனால் சபாநாயகர், முதலில் ராணுவ அமைச்சரை பேச அனுமதித்தார். பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பேச அழைத்தார்.

ஆனால் ராணுவ அமைச்சர் பேசியதற்கு பதிலளிக்க எதிர்கட்சிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அனால் ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் சபாநாயகர்  நடந்து கொண்ட விதம் இந்த விவகாரத்தில் சரியானது கிடையாது. அதனால் தான் அலுவல் ஆய்வு குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். மேலும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் தரும் வரையில் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். மேலும் தமிழக ஆளுநர் ஏட்டிக்கு-போட்டியாக நடந்து கொண்டு வருகிறார்.  அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பெப்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: