சிலிக்கான் வேலி வங்கி விவகாரம் முதலீடு பணத்தை திரும்ப பெற ஏற்பாடு: அமெரிக்க கருவூலம் அறிவிப்பு

நியூயார்க்: சிலிக்கான் வேலி வங்கியில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க கருவூலம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிகவும் பிரபலமான  சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால் அதன் வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள் பெரும் அச்சத்தில் உள்ளன. இந்த வங்கியின் மொத்த டெபாசிட் தொகை ரூ.14.37 லட்சம் கோடி, வங்கியின் சொத்து மதிப்பு ரூ. 17.13 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கிடையே வங்கியின் திடீர் வீழ்ச்சியால் உலகளவில் வங்கித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க கருவூலம், பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகிய அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘வீழ்ச்சியடைந்த சிலிக்கான் வேலி வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களின் பணமும் முழுமையாக திரும்பப் பெற முடியும். வரி செலுத்துவோர் ‘பில்’ கட்ட வேண்டியதில்லை. இன்று முதல் (மார்ச் 13) டெபாசிட்தாரர்கள் தங்களின் அனைத்துப் பணத்தையும் திரும்பப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: