திருப்புத்தூர் அருகே துவார்-பூலாம்பட்டி பகுதியில் காட்டெருமைகள் அட்டகாசம் அதிகரிப்பு-அச்சத்தில் விவசாயிகள்

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே துவார் - பூலாம்பட்டி பகுதியில் காட்டெருமைகள் அட்டகாசம் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.திருப்புத்தூர் அருகே துவார் கிராமத்தில் இருந்து பூலாம்பட்டி செல்லும் சாலை வனப்பகுதிகளில் மற்றும் வள்ளிகண்மாய் பகுதிகளில் ஐந்து காட்டெருமைகள் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாசன பகுதிகளில் பயிரிடப்பட்ட பயிர்களையும் பற்றும் நார்த்தங்காலையும் மேய்ந்து ஏக்கர் கணக்கில் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதிகளில் ஆய்வு செய்து இப்பகுதிகளில் சுற்றி தெரியும் காட்டெருமைகளை கிராமங்களில் இருந்து வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டு கவுன்சிலர் பூலாங்குறிச்சி கருப்பையா கூறுகையில், ‘‘துவார் கிராமத்தில் இருந்து பூலாம்பட்டி செல்லும் வனப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருக்கும் பயிர்களையும், நாட்டங்கால்களையும் சுமார் 5 காட்டெருமைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்து பயிர்களை மேய்ந்து சேதப்படுத்துகிறது.

அந்த காட்டெருமைகளை விரட்ட செல்லும் விவசாயிகளை விரட்டி அச்சுறுத்தவும் செய்தி வருகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்கள் இப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டெருமைகளை உடனடியாக விரட்டியடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

Related Stories: