சிவகங்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்காக அனுமதியின்றி பேனர் வைத்த 35 பேர் மீது வழக்கு பதிவு

சிவகங்கை: சிவகங்கையில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்காக பேனர் வைத்த 35 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த 35 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை அதிமுக நகர செயலாளர் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் உட்பட இபிஎஸ் அணியினர் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்த ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததால், ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த சேகர் உள்ளிட்டோர் மீதும்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களால் பல விபத்துகளும், அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இவ்வாறு பேனர்கள் வைக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ பேனர்களை வைக்கக் கூடாது என உத்தரவிட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதியின்றி அதிக அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைத்திருப்பதாக எழுந்த புகாரினை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: