இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரன்ட் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரன்ட்டுக்கு பலுசிஸ்தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கடந்த 2018ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். அப்போது, வௌிநாட்டு தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பாதுகாத்து வரும் பாகிஸ்தான் அரசு கரூவூலமான தோஷகானாவிடமிருந்து, குறைந்த விலைக்கு பரிசுப் பொருட்களை வாங்கி, சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் இம்ரான் கான் நேரில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந்த விவகாரத்தில் இம்ரான் கான் மீது ஜாமீனில் வௌிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்து குவெட்டாவில் உள்ள ஜுடிஷியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து இம்ரான் கானுக்கு எதிரான ஜாமீனில் வௌிவர முடியாத கைது வாரன்ட்டை ரத்து செய்ய கோரி பலுசிஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த பலுசிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி, இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரன்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories: