ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24 முதல் தற்காலிகமாக செயல்படாது: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் சக்கர செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதனால், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளுக்காக மார்ச் 24, 2023 முதல் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக செயல்படாது.

இதற்கு மாற்றாக பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை பரங்கிமலை மெட்ரோ நிலைய வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் மெட்ரோ பயணிகள் வழக்கம்போல் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் நான்கு சக்கர வாகன பயன்பாட்டாளர்கள் தற்காலிகமாக வாகன நிறுத்த இயலாததற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: