அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பதவி விலகல்? இந்தியருக்கு இடைக்கால பொறுப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பதவி விலகுகிறார். அவருக்கு பதில் இடைக்கால செய்தி தொடர்பாளராக வேதாந்த் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராக கடந்த 2021ம் ஆண்டு முதல் நெட் பிரைஸ் பணியாற்றி வருகிறார். இவர் இம்மாதம் இறுதியில் பதவியில் இருந்து விலக உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆன்டனி பிளிங்கனின் அலுவலக அதிகாரியாக நெட் பிரைஸ் நியமிக்கப்பட உள்ளார். இதையடுத்து இடைக்கால செய்தி தொடர்பாளர் பதவிக்கு வேதாந்த் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியறவு துறையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளரான வேதாந்த் படேல் தினசரி வெளியுறவுதுறை செய்தி மாநாட்டை நடத்திய முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றவர். குஜராத்தை சேர்ந்த வேதாந்த் இதற்கு முன் அதிபர் ஜோ பைடனின் செய்தி தொடர்பாளராக பணியாற்றியுள்ளார்.

Related Stories: