குழாய் உடைந்த விவகாரத்தில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாக சென்னை பெட்ரோலிய  கார்ப்பரேஷனுக்கு (சிபிசிஎல்) சொந்தமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் கலந்தது. குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சுற்றுச்சூழல்துறை  அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், இங்கு சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்களை முழுமையாக அகற்ற கோரி கடந்த 3ம் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் நலன் கருதி அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கலெக்டர், குழாய் முற்றிலுமாக அகற்றப்படும் என உறுதி அளித்தார். தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் நீர் மற்றும் மண் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.  இந்த விவகாரத்தில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.விவரம் தெரியாமல் எடப்பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் தாமதமாக நடப்பதைபோல நினைத்து பணிகள் எல்லாம் நிறைவு பெற்றவுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மீனவ சமுதாய மக்களை பாதுகாப்பதில் முதல்வரின் பங்கு அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: