நாகையில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்; சிபிசிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மெய்யனாதன் பேட்டி

நாகை: நாகையில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன் கடந்த 2-ம் தேதி திடீரென உடைந்து, நாகூர் முதல் வேளாங்கண்ணி வரையிலான கடல் நீர் முழுவதும் பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் படர்ந்துள்ளது. கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் வீரியத்தால் கடலோரத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:

கச்சா எண்ணெய் கசிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுசூழல் துறை மூலம் 3 ஆராய்ச்சியாளர்களை அனுப்பியுள்ளனர். 3 ஆராய்ச்சியாளர்களும் கச்சா எண்ணெய் மாதிரியை 6-ம் தேதி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.

2-ம் தேதி ஏற்பட்ட கச்சாஎண்ணெய் குழாய் உடைப்பு துரித நடவடிக்கையில் ஒட்டுமொத்த மாவட்ட நிவாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாக காலத்தில் நின்று அதனை சீர் செய்துள்ளனர். இதனை அடுத்து முதலமைச்சரை சந்தித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சிபிசிஎல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Related Stories: