மும்பையில் ஹெல்மெட் அணியாத 10,000 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தது போக்குவரத்து போலீஸ்

மும்பை: மும்பையில் ஹெல்மெட் அணியாத 10,000 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸ் அபராதம் விதித்தது. மதுபோதையில் வாகனம் ஓட்டிய 146 பேர் பிடிபட்டதாக மும்பை போக்குவரத்து போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் போக்குவரத்து விதிகளும் மீறப்பட்டு விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது. இதனைதொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தியது. அதன்படி வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் இன்றி செல்லும் பொழுது விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று கடுமையாக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தாலும், சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும் ஒரு வாகனத்தில் 2-க்கும் மேற்பட்டோர் செல்வதும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது போன்ற விதிமீறல் சம்பவங்களே அதிகளவில் நடக்கிறது.

இதுபோன்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது சரியே என்று ஒரு தரப்பினர் கூறிவந்தாலும், பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அபராதம் விதிப்பது என்பது வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்கள் ஓட்டவேண்டும் என்பதற்காகத்தான். அபராதம் வசூலிப்பது மிரட்டுவதற்கோ, பணம் வசூலிப்பதற்கோ இல்லை என போலீசார் கூறுகின்றனர்.

Related Stories: