சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருது, கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமனான ஆணைகள் மற்றும் பல்வேறு விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும் சர்வதேச மகளிர் தினவிழா, சமூக நலப்பணிக்காக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கமலம் சின்னசாமிக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது. பெண் குழந்தை விருது சேலம் மாவட்டத்தை சேர்ந்த ம.இளம்பிறைக்கு வழங்கப்பட்டது. மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), அருண் தம்புராஜ் (நாகை), ஸ்ரேயா சிங் (நாமக்கல்) ஆகியோருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.