இதய வலி ஆபத்தை அதிகரித்த கொரோனா: ஆய்வில் புது தகவல்

வாஷிங்டன்: கொரோனா பாதித்து 6 மாதத்திற்கு பிறகு இதய வலிக்கான பாதிப்பை அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இன்டர்மவுண்டன் ஹெல்த் அமைப்பின் ஆய்வாளர்கள், கொரோனா பாதித்த 1.50 லட்சம் பேரிடம் சோதனை மேற்கொண்டனர். இதில், கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் இதய வலி ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவே, நீண்டகால கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, 4 வாரங்கள் அல்லது அதற்கு மேலான காலகட்டத்தில் இதய வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘லேசான தொற்று ஏற்பட்டவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத பாதிப்புகள் ஏற்படுவதற்கான விகிதங்கள் பெரிய அளவில் இல்லை. ஆனாலும், இதய வலி தொடர்ச்சியான பிரச்னையாக இருப்பதை கண்டறிந்துள்ளோம். இது எதிர்கால தீவிர இதய பாதிப்புகளுக்கான அறியாகவும் இருக்க வாய்ப்புள்ளது’’ என எச்சரித்துள்ளனர்.

Related Stories: