இம்ரான் கைது வாரன்ட்டை நிறுத்தி வைக்க பாக். கோர்ட் மறுப்பு

இஸ்லாமாபாத்: இம்ரான் கானுக்கு எதிரான கைது வாரன்ட்டை நிறுத்திவைக்க முடியாது என்று பாகிஸ்தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை,  விலைக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரன்டுடன் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அப்போது அவர் வீட்டில் இல்லை.  

இதற்கிடையே இம்ரானின் வழக்கறிஞர்கள், இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில்  விசாரணையின்போது ஆஜராகி, இம்ரான் மீதான கைது வாரன்ட்டை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.   இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரதுவழக்கறிஞர் இமாம் இமாம் வாதிட்டார். ஆனால் அவர்களின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். கைது வாரன்ட்டுக்கு இடைக்கால தடை பெறுவதற்கு  உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்றும் நீதிபதி  தெரிவித்தார்.

Related Stories: