மேலும் 65 காலாவதியான சட்டங்களை நீக்க மசோதா: ஒன்றிய சட்ட அமைச்சர் ரிஜிஜூ தகவல்

பனாஜி: கோவாவில் நடந்த 23வது காமன்வெல்த் சட்ட மாநாட்டில் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பங்கேற்று பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.98 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. காகிதம் இல்லா நீதித்துறையை உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் இவற்றை முடித்து வைப்பதே அரசின் நோக்கமாகும்.

மக்களுக்காகவே சட்டங்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அந்த சட்டங்கள் தடையாக, சுமையாகும் பட்சத்தில் அவை நீக்கப்பட வேண்டும். கடந்த 8 ½ ஆண்டுகளில் 1,486 வழக்கொழிந்த, தேவையற்ற சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில், மேலும் 65 காலாவதியான சட்டங்களை நீக்க மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: