மெக்சிகோ டென்னிஸ் டோனா வேகிச் சாம்பியன்

மான்டெர்ரி: மெக்சிகோவில் நடந்த அபியர்டோ ஜிஎன்பி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், குரோஷியா வீராங்கனை டோனா வேகிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இத்தொடரின் முதல் நிலை வீராங்கனை கரோலின் கார்சியாவுடன் (29 வயது, 5வது ரேங்க், பிரான்ஸ்) மோதிய வேகிச் (26 வயது, 23வது ரேங்க்) 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி, 29 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். நடப்பு சீசனில் முதல் முறையாக டாப் 10ல் உள்ள வீராங்கனையை வீழ்த்திய வேகிச், 2021க்கு பிறகு தனது முதல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Related Stories: