அதானி குழுமத்தில் மொரீஷியஸ் நிறுவனங்கள் முதலீடு இதுவரை ‘செபி’ ஏன் விசாரிக்கவில்லை?: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கேள்வி

மும்பை: அதானி குழுமத்தில் மொரீஷியஸை சேர்ந்த நான்கு நிதி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்திருப்பது குறித்து செபி ஏன் விசாரிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் பெரும் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக அதானி குழுமத்தின் வர்த்தகம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இவ்விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை குழு ஒன்றையும் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மொரீஷியஸ் நாட்டின் சந்தேகத்திற்குரிய நிறுவனங்களிடமிருந்து அதானி குழுமம் முதலீட்டைப் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த நிறுவனங்களின் உரிமை குறித்து செபி (பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு) ஏன் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை? மொரீஷியஸை சேர்ந்த நான்கு நிதி நிறுவனங்களும் தங்களது 6.9 பில்லியன் டாலர் நிதியில் சுமார் 90 சதவீதத்தை அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இந்த விசயத்தில் செபிக்கு விசாரணை அமைப்புகளின் உதவி தேவையா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: