திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்: 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு தீர்வு

செங்கம்: திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட திட்டத்திற்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கிய காலத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த வழித்தடத்தில் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதுடன், மண் சாலையாக மாறி மழைக்காலங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள்  பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அதேபோல், அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு வந்தது.

எனவே, சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள வலியுறுத்தி, பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது, திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலை விரிவாக்க பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டெல்லி உட்பட பல மாநிலங்களுக்கு செல்லும் அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: