ஜெனீவாவில் எதிர்ப்பு போஸ்டர் சுவிஸ் தூதருக்கு இந்தியா சம்மன்

புதுடெல்லி: ஜெனீவாவில் உள்ள ஐநா கட்டிடம் முன்பாக இந்தியாவுக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து தூதரை அழைத்து ஒன்றிய அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐநா கட்டிடம் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக இந்தியாவுக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.சம்மனைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் நேரில் ஆஜரான சுவிஸ் தூதர் ரால்ப் ஹெக்னர், இந்தியாவின் கவலைகளை சுவிட்சர்லாந்து அரசுக்கு தெரியப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.  மேலும், ஜெனீவாவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட இடம் அனைவருக்குமான பொது இடம் என்றும், அந்த விஷயத்தை சுவிஸ் அரசு ஆதரிக்கவில்லை என்றும் தூதர் விளக்கம் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: