உஸ்பெக்கில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமம் ரத்து?

நொய்டா: உபி மாநிலம், நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும்  இருமல் மருந்துகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் இந்நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்தனர். மரியான் பயோடெக்கில் ஒன்றிய மற்றும் உத்தரபிரதேச மருத்துவ நிபுணர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். இதன் பரிசோதனை முடிவுகள் வௌியாகியுள்ளன.அதில் அந்த நிறுவன  மருந்துகளில் 22 தயாரிப்புகள் தரமானதாக இல்லை என  மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மரியான் பயோடெக் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கை துவங்கி உள்ளதாக மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறைஅதிகாரி தெரிவித்தார்.

Related Stories: