போலீசார் ஆதாரம் சமர்பிக்காததால் பிரதமரை கொல்வதாக மிரட்டல் விடுத்தவர் விடுதலை

புதுடெல்லி: பிரதமர் மோடியை கொல்லப் போவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரை டெல்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. பிரதமர் மோடியை கொல்லப்போவதாக அவசர காவல் உதவி எண் 100க்கு மிரட்டல் விடுத்ததாக முகமது முக்தார் அலி என்பவர் மீது ஆனந்த் பர்பாத் நிலைய போலீசார் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுபம் திவாடியா, அலி மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு தேவையான முக்கிய ஆதாரமாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்யும் கையெழுத்து பிரதி மட்டுமே உள்ளது என்று கூறி இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட், `` போலீஸ் தரப்பில் போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொடுக்க தவறியதால் அலி விடுவிக்கப்படுகிறார்,’ என்று  உத்தரவிட்டார்.

Related Stories: