புழுதிவாக்கம் - மடிப்பாக்கம் ஏரிக்கரையில் நிர்பயா திட்டத்தில் 137 எல்இடி விளக்குகள்: அமைச்சர், எம்எல்ஏ இயக்கி வைத்தனர்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலம், புழுதிவாக்கம் 186வது வார்டில் உள்ள ஷீலா நகர், ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம் மற்றும் 187வது வார்டில் உள்ள அய்யப்பன் நகர், ஏரிக்கரை தெரு போன்ற பகுதிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் 137 தெரு விளக்குகளுடன் கூடிய எல்இடி விளக்குகளை இயக்கி ஒளிரவைக்கும் விழா புழுதிவாக்கம் ஷீலா நகர், மடிப்பாக்கம் ஐயப்பன் நகர் போன்ற பகுதியில் நேற்று முன்தினம் நடந்தது. சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். மண்டலக் குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.கே.மணிகண்டன், ஸ்டெர்லி ஜெய் முன்னிலை வகித்தனர்.  

விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய மின்கம்பங்களில் எல்இடி விளக்குகளை இயக்கி ஒளிர விட்டார். நிகழ்ச்சியில் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், செயற்பொறியாளர் ஆர்.முரளி, மாமன்ற உறுப்பினர் சமீனா செல்வம், வட்ட செயலாளர்கள் எம்.கே.ஜெய், வழக்கறிஞர் குமாரசாமி, சுரேஷ், ஆர்.ராமமூர்த்தி, ராமகிருஷ்ணன், விமல், ஜவகர், நலச்சங்க நிர்வாகிகள் பாபு, ரெங்கசாமி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: