சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்திற்குள் வந்தார். முதலில் பேட்டிங்கில் சில தடுப்பாட்ட ஷாட்டுகளை ஆடிய டோனி, பிறகு கவர் திசையில் பந்தை அடித்து தனது பயிற்சியை தொடங்கினார். அப்போது தோனி அடித்த ஒரு ஷாட்டை பார்த்து அங்கிருந்து அனைவரும் ஒரு நொடி ஆச்சரியத்தில் நின்றனர். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பென் ஸ்டோக்ஸ் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் ஸ்டோக்ஸை அதிகமாக பந்து வீச பயன்படுத்த வேண்டாம் என டோனி முடிவெடுத்துள்ளார்.