பெண் ஐஏஎஸ் அதிகாரி பணமோசடி: ரூ.3 கோடி ரொக்கம் பறிமுதல்

புதுடெல்லி: ஜார்கண்டில் ஐஏஎஸ் பெண் அதிகாரிக்கு எதிராக பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது 3கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்டில் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா சிங்கால், மாவட்ட கலெக்டராக பதவி வகித்த போது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பணபரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பெண் அதிகாரியான பூஜா சிங்கால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு ெதாடர்பாக ஜார்கண்டின் ஹசாரிபேக் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது முகமது இ அன்சாரி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.3கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: