திருப்பதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு

திருப்பதி: திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில்,10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் 11 இலவச பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் பக்தர்கள் திருப்பதி மலையில் இலவசமாக பயணிக்கலாம். அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தவிர்ப்பதற்காக திருப்பதி மலை முழுவதும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் திருப்பதி திருமலை இடையே தற்போது மின்சார பேருந்துகளை இயக்க துவங்கி உள்ளது. தற்போது திருமலை திருப்பதி இடையே 50 மின்சார பேருந்து இயக்கி வரும் அரசு போக்குவரத்து கழகம் முழு அளவில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் திருப்பதி மலையில் தேவஸ்தானத்தின் பயன்பாட்டிற்காக மின்சார கார்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பதி மலையில் பக்தர்களின் இலவச போக்குவரத்து வசதிக்காக ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தான நிர்வாக முடிவு செய்தது.

Related Stories: