காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள சர்  கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சோனியா காந்தியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் உள்ளார் எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: