பிபிசியில் ரெய்டு இங்கிலாந்து அமைச்சருக்கு ஜெய்சங்கர் பதில்

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என இங்கிலாந்திடம் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ஊடக நிறுவனம் பிபிசி, 2002ம் ஆண்டு குஜராத் கலவர ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆவணப்படத்தை ஒன்றிய அரசு தடைசெய்தது. மேலும் ஆவணப்படத்தை தயாரித்த பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டது. அதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில்,இங்கிலாந்து வெளியுறவுதுறை அமைச்சர் ஜேம்ஸ்சுடன், ஒன்றிய  வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த சந்திப்பின் போது, பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரி  சோதனை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது‘‘ நாட்டில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க வேண்டும்’’ என்று இங்கிலாந்து அமைச்சரிடம் ஜெய்சங்கர் உறுதியாக தெரிவித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: