காங். ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டர் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்: மல்லிகார்ஜூன கார்கே உறுதி

புதுடெல்லி: நாட்டில் கடந்த 8 மாதங்களுக்கு பின் முதல் முறையாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையானது நேற்று உயர்த்தப்பட்டது. மூன்று வடகிழக்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனே எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நேரத்தில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது ரூ.50 மற்றும் வணிக எரிவாயு சிலிண்டரானது ரூ.351ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை  எத்தனை காலத்துக்கு தொடரும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூலமான கொள்ளைக்கு முடிவு கட்டப்படும்” என்றார். கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா கூறுகையில், ‘‘சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மூலமாக மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி பண்டிகை பரிசு அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராஜஸ்தானில் வழங்குவது போல் ரூ.500க்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்” என்றார்.

Related Stories: