உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை: உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க  உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. டெண்டர் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டது.

அதன்படி, நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டது. உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான டெண்டருக்கு தடை கோரி நதியழகன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அனுபவமில்லாத நிறுவனங்களும் பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளதால் டெண்டரை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்த வழக்கை மார்ச் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: