கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் இன்றும், மார்ச் 4ம் தேதியும் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மார்ச் 2, 3, 5ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மார்ச் 4, 5ல் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு மார்ச் 4, 5ல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியிருந்தது.

Related Stories: