அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு: ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை

டெல்லி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுடெல்லியில் ஒன்றிய‌ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய‌ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (28.02.2023) புதுடெல்லியில் உள்ள கிருஷி பவன் (Krishi Bhavan) அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு  குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  தமிழ்நாட்டில்  செயல்படுத்தப்பட்டு வருகின்ற ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், திறன் மேம்பாடு திட்டங்கள் மற்றும் வழங்கப்படுகின்ற பயிற்சிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக  விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில்  செயல்படுத்தபட்டு வருகின்ற‌திட்டங்களுக்கான  கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் வழங்குதல் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக்கூட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைசெயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவன மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: