சென்னை மற்றும் புறநகரில் கழிவுநீரை நீர்நிலையில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் கழிவுநீரை நீர் நிலைகள் மற்றும் காலியிடங்களில் வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் நடந்த ஆய்வின் போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகள் காலியிடங்களில் வெளியேற்றுவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காலியிடங்களில் நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் சேகரிக்கப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர்நிலைகள் மற்றும் காலியிடங்களில் வெளியேற்றப்படுவது குறித்த புகார்கள் தொடர்ச்சியாக வந்த நிலையில் அதிகாரிகளால் வெவ்வெறு நாட்களில் வெவ்வெறு நீர்நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. கழிவுநீரை டேங்கர் லாரி மூலம் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான புகார்கள் வந்தால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றுவதால், அவை அடையாறு, கூவம், மற்றும் புறநகரில் உள்ள நீர்நிலைகளில் கலந்து நீர் நிலைகள் மாசுபடுகிறது. சுத்திகரிக்க ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த உரிமம் பெற்ற லாரிகளின் மூலம் அகற்றவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: