டெல்லி: கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தினமும் கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். வெப்பத்தின் தாக்குதலால் ஏற்படும் நோய்களை தடுக்க நாளை முதல் தினமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
